கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மியான்மரில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு! 

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 11:07 am

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 

மியான்மரின் கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஜேட் பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகக் கூறப்படுகிறது. எனவே அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கச்சின் மாகாணத்தின் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.