திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

'ஜெமினி' செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது கூகுள்!

கூகுள் நிறுவனம் தனது புதிய 'ஜெமினி' (GEMINI) செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. 

News image
Updated On :7 டிசம்பர் 2023, 12:49 pm

DIN

செய்யறிவு தொழில்நுட்பங்கள் கடந்த ஆண்டில் மட்டும் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் தனது 'ஜெமினி' (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். 

சாட் ஜிபிடி-க்கு(ChatGPT) போட்டியாக தனது 'பார்ட்' (Bard) செய்யறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்திருந்தது. பல போட்டிகளுக்கு நடுவில் 'பார்ட்' தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள 'ஜெமினி' அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களையும் விஞ்சும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

ஜெமினி நானோ (Gemini Nano), ஜெமினி ப்ரோ (Gemini Pro), ஜெமினி அல்ட்ரா (Gemini Ultra) என மூன்று வடிவங்களில் இந்த செய்யறிவு தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

பெஞ்ச் மார்க்குகளில் (benchmarks) சாட் ஜிபிடி.4-ஐ விஞ்சியிருக்கும் ஜெமினி அல்ட்ரா, பல வழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்து (text) வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள், காணொளி, ஒலி மற்றும் கோடு (Code) வடிவிலும் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக ஜெமினி உருவாக்கப்பட்டுள்ளது. 

கேமராவின் முன் ஒரு காகிதத்தில் ஏதேனும் வரைந்தாலோ அல்லது கை அசைவுகள் மூலம் தகவல்கள் தெரிவித்தாலோ, அதனையும் புரிந்துகொண்டு உரையாடல்கள் மேற்கொள்கிறது ஜெமினி.  

Story image
Story image

'ஜெமினி நானோ' தற்போது 'கூகுள் பார்ட்' தளத்தில் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், ஜெமினி ப்ரோ டிசம்பர் 13 அன்றும், ஜெமினி அல்ட்ரா அடுத்த ஆண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.