
டைம்ஸ் நாளிதழ் ஆண்டு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அந்தாண்டுக்கான சிறந்த நபர் என்கிற பெயரை அறிவிக்கும்.
2023-ம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர், அமெரிக்க பாப் இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்.
இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “டெய்லரின் சாதனைகள்- கலாச்சார, விமர்சன மற்றும் வணிகரீதியாக - திரண்டு நிற்கிறது. அவற்றைப் பட்டியலிடுவது இயலாத காரியம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
2023-ல் பல சமயங்களில் நாளிதழ்களில் தலைப்பு செய்தியில் அடிபடும் பெயராக டெய்லர் ஸ்விஃப்ட் இருந்துள்ளார். அக்டோபரில் வெளியான அவரது இசை நிகழ்ச்சிகள் திரைப்படம் ‘எராஸ் டூர்’ உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
டைம்ஸ் நாளிதழ், கடந்த ஆண்டு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியை அந்தாண்டுக்கான நபராகத் தேர்வு செய்தது. 2021-ல் எலான் மஸ்க் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: டெய்லர் ஸ்விஃப்ட்: நூற்றாண்டின் பாடகி!
நபர்களுக்கு மட்டுமில்லாமல் குழு அல்லது பொருள் அல்லது கருத்துருக்களுக்கும், டைம்ஸின் அந்தாண்டுக்கான நபராக அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Time Magazine: Weâd like to name you Person of the Yea-
â Taylor Swift (@taylorswift13) December 6, 2023
Me: Can I bring my cat. https://t.co/SOhkYKSTwG
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


ஊழலைத் தடுக்க நெல் கொள்முதல் விரைவில் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ப. வெங்கடரமணன்

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மாணவா்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது - உச்சநீதிமன்றம்





