இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா மூத்த தலைவரின் மகன் பலி
சிரியா எல்லை அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் பலியானார்.

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
சிரியா எல்லை அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் பலியானார்.
சிரியா எல்லைக்கு அருகில் ஒரு வாகனத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் ஹசன் அலி டக்டோக் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர்.
தாக்குதலில் பலியான ஹசன் அலி டக்டோக் தெற்கு சிரியாவில் பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பதாகக் கூறப்படும் அலி முசா டக்டோக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...