சிங்கப்பூர் உலகிற்கு உணர்த்த விரும்புவது...: தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூரின் ஆயுத படை அதிகாரிகள் புதிதாக பதவியேற்கும் நிகழ்வில் அந்நாட்டு அதிபர் பேசியுள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் | கோப்பு
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் | கோப்பு
Published on
Updated on
1 min read

சிங்கப்பூர், சட்டத்தின் நெறிமுறைகளைக் காப்பதன் அவசியத்தையும் உரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாக விவாகரங்களைத் தீர்த்துக் கொள்ளும் வழியையும் உலகிற்கு உணர்த்துவதில் முன்னுதாரணமாக விளங்குவதாக அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச கூட்டுறவின் ஆதரவால் மட்டுமே இதுபோன்ற விவகாரங்களைக் கையாள இயலும்.

அமைப்பைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னெச்செரிக்கையாக இருப்பதும் முக்கியம் எனச் சனிக்கிழமை புதிதாக ஆயுத படைப் பிரிவவில் பதவியேற்கும் 460 அதிகாரிகளிடம் பேசும்போது அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அவர், “எங்கு சட்டத்தின் விதிகளை நிலைநிறுத்த வேண்டும் எங்கு உரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சிங்கப்பூர் உலகிற்கு உணர்த்துவதில் முழு கவனம் கொண்டுள்ளது” எனப் பேசியுள்ளார். 

இதையும் படிக்க: 

சிங்கப்பூரின் ஆயுத மற்றும் விமான பிரிவு அந்நாட்டின் எண்ம மற்றும் உளவு சேவை அமைப்போடு இணைந்து பணியாற்றி வருவதைக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்பு எல்லாவற்றையும்விட ராணுவத்தின் பலமே நாட்டின் மக்கள்தான் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com