பாலஸ்தீன ஆயுதப் படையினர், காஸாவில் இஸ்ரேல் வீரர்கள் மீது பதுங்கியிருந்து தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் 9 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகியுள்ளனர்.
அக்.7 தொடங்கிய போர், மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து வருகிறது. பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 18,400 என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள், குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பொதுமக்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்குமாறு இஸ்ரேலைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஐநாவில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தனது விட்டோ அதிகாரம் கொண்டு தடை செய்தது. மேலும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அளித்தும் வருகிறது.
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தரைவழி தாக்குதல் ஆறு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், வெவ்வேறு இடங்களில் ஹமாஸுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் நேரடியான மோதல் நடந்து வருகிறது.
மக்கள் அதிகம் வாழும் ஷிஜாய்யா பகுதியில் நடந்த மோதலில் 9 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகியுள்ளனர்.
களச்சோதனையில் இருந்த 4 வீரர்கள் தொலைந்ததையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இஸ்ரேலிய வீரர்கள் மீது மறைந்திருந்து ஹமாஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: ராணுவ வீரர்களின் களியாட்டம்: இஸ்ரேலுக்குத் தலைவலியாகும் போர்!
இந்த ஒன்பது பேரில் மூத்த அதிகாரிகளும் அடக்கம். வீரர்கள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ள இஸ்ரேல் மேற்கொண்டு தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


