டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ராணுவ வீரர்களின் களியாட்டம்: இஸ்ரேலுக்குத் தலைவலியாகும் போர்!

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பொருத்தமற்ற முறையில் நடந்து கொள்ளும் விடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

News image
ராணுவ வீரர்களின் நடனம் | AP
Updated On :13 டிசம்பர் 2023, 5:44 am

DIN

இஸ்ரேல்- ஹமாஸ் போர் மூன்றாவது மாதமாகத் தொடர்ந்துவரும் நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இஸ்ரேல் வீரர்களின் பொருத்தமற்ற செயல்களை மேற்கொள்ளும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச அளவில் இஸ்ரேலின் போர் நெறிகள் குறித்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில் இஸ்ரேல் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வது இஸ்ரேலுக்கு தலைவலியை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

வைரலாகிவரும் விடியோவில் இஸ்ரேலிய வீரர்கள் காஸாவில் உள்ள பொம்மை கடை ஒன்றைத் தகர்ப்பதும் பொம்மைகளின் தலையைத் துண்டிப்பதும் கைவிடப்பட்ட உணவு மற்றும் குடிநீர் டிரக்கை தீயிட்டு கொளுத்துவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வெறுப்பு பிரசாரப் பாடல்களைப் பாடி இஸ்ரேல் வீரர்கள் வட்டமாக நடனமிடுவது போலான விடியோக்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவு பொருள்கள் உள்ள டிரக்கைக் கொளுத்தும் இஸ்ரேலிய வீரர்கள் | AP

உணவு பொருள்கள் உள்ள டிரக்கைக் கொளுத்தும் இஸ்ரேலிய வீரர்கள் | AP

போருக்கு இடையில், வீரர்கள் இவ்வாறு பொருத்தமில்லாது தீங்கிழைக்கும் வகையில் நடந்து கொள்வது இது முதல் முறை இல்லை.

இருப்பினும், சமீபத்திய விடியோக்கள் தேசத்தின் ஒட்டுமொத்த மனநிலையைக் காண்பிப்பதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“மனிதநேயமற்ற தன்மை தலைவர்களிடம் இருந்து வீரர்களுக்குக் கடத்தப்பட்டுள்ளது” என்கிறார் இஸ்ரேலிய மனித உரிமைகள் செயல்பாட்டாளர் டிரார் சடோட்.

மேலும், ஒரு இஸ்ரேல் வீரர் காஸாவின் வீட்டிற்குள் நுழைந்து அலமாரிகளில் உள்ள உள்ளாடைகளைப் படமெடுக்கிற விடியோ ஒன்றும் மற்றொரு வீரர் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கான விரிப்புகளைக் கழிவறையில் தூக்கி வீசுகிற விடியோவும் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வுகள், இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பின் நெறிகளுக்குப் பொருந்தாது, ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.