இன்ஸ்டாகிராமில் புதிய ஏஐ வசதி!

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

இன்ஸ்டாகிராமில் புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா நிறுவனம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி (Story) வசதியில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இமேஜ் ஜெனரேசன் (Image generation AI) செய்யறிவு தொழில்நுட்பம் மூலம், ஒரு புகைப்படத்தில் உள்ள பின்புலத்தை மாற்றி புதிதாக புகைப்படங்களை உள்ளிட முடிகிறது.

அதாவது, சாதாரணமாக ஒருவர் படுத்திருப்பது போன்ற புகைப்படத்தில் இந்த புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நாய்குட்டிகளுக்கு நடுவில் படுத்திருப்பது போன்ற மாற்றங்களைச் செய்ய முடியும். இதற்கு பெரிய வழிமுறைகள் எதுவும் தேவையில்லை. வெறும் 'சுற்றி நாய்குட்டிகள் இருக்க வேண்டும்' ('Surrounded by puppies') என உள்ளிட்டால் போதுமானது. மீத வேலையை இந்தத் தொழில்நுட்பம் செய்து முடிக்கிறது. 

சாதாரண புகைப்படத்தில் நாய்குட்டிகளை உருவாக்கிய புதிய தொழில்நுட்பம் 
சாதாரண புகைப்படத்தில் நாய்குட்டிகளை உருவாக்கிய புதிய தொழில்நுட்பம் 

இந்த இமேஜ் ஜெனரேசன் எனப்படும் செய்யறிவு தொழில் நுட்பத்துடனான வசதி தற்போது அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற இடங்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com