ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சீனத்தை அடக்கு; இந்தியாவுடன் உறவை மேம்படுத்து: பாகிஸ்தானுக்கு அறிவுரை

பாகிஸ்தானுக்குள் சீனத்தின் ஊடுருவலை அடக்குமாறு ராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிரிடம், அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:28 pm

DIN


பாகிஸ்தானுக்குள் சீனத்தின் ஊடுருவலை அடக்கி, இந்தியாவுடன் அமைதியையும் வணிகத்தையும் மேம்படுத்துமாறு பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிரிடம், அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிர், வாஷிங்டன் சென்றிருக்கும் நிலையில், அமெரிக்கா தரப்பில், நேரடியாக பாகிஸ்தானிடம் இந்த தகவல் திட்டவட்டமாகக் கூறப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானுக்குள் சீனத்தின் பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக மிக முக்கிய உளவுத் தகவல்  வெளியாகியிருக்கிறது. அதாவது, பாகிஸ்தானின் பலோசிஸ்தானில் தங்கள் நாட்டு ராணுவ முகாமையும், குவாடர் சர்வதேச விமான நிலையத்தை, தங்கள் நாட்டு போர் விமானங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் பாகிஸ்தானை அனுமதி கோரியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா, பாகிஸ்தானிடம் நேரடியாக இந்த கருத்தை வலியுறுத்தியிருக்கிறது.

கடந்த செப்டம்பரில் அமெரிக்க தூதர் டொனால்ட் ப்ளோம், மிக ரகசியமாக, பலோசிஸ்தானில், சீன நிதியில் அமைக்கப்பட்டு வரும் க்வாடார் துறைமுகத்தை பார்வையிட்டதாகவும், அதன்பிறகு, நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அமெரிக்க கண்காணித்து, கணித்து, இந்த வலியுறுத்தலை பாகிஸ்தான் முன் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் பாகிஸ்தானுக்கு தேவைப்படும் பொருளாதார உதவியைச் செய்ய வேண்டுமானால், அமெரிக்கா வைக்கும் சில விதிமுறை மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும், சீனா, பாகிஸ்தானுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கவும், இந்தியாவுடன் வணிகம் மற்றும் அமைதியை மேம்படுத்தவும் வேண்டும் என்றும் நிபந்தனையை பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.