இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையில் நிலவுகிற கடும் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்யக் குழுக்கள் இந்தியாவுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
சென்ற வாரம் தேர்வுக் குழு வந்துசென்ற பிறகு, அடுத்த வாரம் அதிகாரமட்டத்திலான குழுவினர் வரவுள்ளனர்.
இஸ்ரேலிய கட்டுமான கூட்டமைப்பின் தலைவர் ஷே பாஸ்னர், ”தில்லி மற்றும் சென்னையில் அடுத்த வாரம் டிச.27 முதல் இதற்கான ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளோம். முதல்கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்கள் அரசின் அறிவுறுத்தல்படி பணிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பின்னர் இதன் மேம்பாட்டைப் பொறுத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் வரை இந்தளவு அதிகரிக்கலாம். மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடைபெறக்கூடியது இது. அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தேர்வுப் பணி 10 முதல் 15 நாள்களுக்குத் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மேற்குக் கரை மற்றும் காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீன தொழிலாளர்கள் பெருமளவில் இஸ்ரேலில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். போரின் காரணமாக அவர்களின் வேலைக்கான அனுமதி திரும்ப பெறப்பட்டது.
இதையும் படிக்க: நார்வே அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட வைகிங் கால கப்பல்
இந்த நிலையில் கட்டுமான தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பல்வேறு பணிகள் இஸ்ரேலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வனத் துறை சாா்பில் 2 ஒப்பந்தங்கள் கையொப்பம்

தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம்? - மத்திய அரசு பரிசீலனை

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு: அனில் அம்பானி மகனிடம் ஆறரை மணி நேரம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

