அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் பனெர் மாவட்டத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:31 pm

DIN


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் பனெர் மாவட்டத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவில் போட்டியிட சவீரா பர்காஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.  இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மருத்துவராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற இவரது தந்தை ஓம் பர்காஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் 35 ஆண்டுகாலமாக உறுப்பினராக இருந்தார். தந்தையின் அடியை பின்பற்றி, மகளும் அரசியலில் பயணிக்க, இன்று முதல் இந்துப் பெண்ணாக பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்.

2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு சிக்குண்டு கிடக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது.

Image courtesy Rab Nawaz Baloch X page

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.