உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா

போர் ஆரம்பித்த 22 மாதங்களில் இதுபோல் சரமாரியான தாக்குதல் எட்டு மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
தீப்பற்றிய கட்டடம் | AP
தீப்பற்றிய கட்டடம் | AP

ரஷியா, உக்ரைன் மீது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டதட்ட 13 பேர் இதில் பலியாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

போர் ஆரம்பித்த 22 மாதங்களில் இதுபோல் சரமாரியான தாக்குதல் எட்டு மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு தொடங்கி சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, உக்ரைன் 87 ஏவுகணைகள் மற்றும் 27 சாஹெத் வகை ட்ரோன்களைத் தடுத்து அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 தீயை அணைக்க முயற்சிக்கும் உக்ரைனிய பணியாளர்கள் | AP
 தீயை அணைக்க முயற்சிக்கும் உக்ரைனிய பணியாளர்கள் | AP

முதல்நிலை போர், பனிச் சூழல் காரணமாக தடைபட்டுள்ளது. உக்ரைன் தனது ஆதரவு நாடுகளிடம் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் வான்வழி தற்காப்பு ஆயுதங்களை விரைந்து அளிக்குமாறு கேட்டு வருகிறது.

18 மணி நேரம் தொடர்ந்த இந்தத் தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.

காயமுற்ற உக்ரைனியர் | AP
காயமுற்ற உக்ரைனியர் | AP

ரஷியா தன்னிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் இந்தப் போரில் பயன்படுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு தொடங்கிய தாக்குதல் உக்ரைனின் தலைநகர் உள்பட ஆறு நகரங்கள், தெற்கு முதல் வடக்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com