வீடுகளுக்குள்ளேயே இருங்கள்: தாய்லாந்து அரசு எச்சரிக்கை

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் காற்று மாறு அளவை விட 14 மடங்கு கூடுதலாக காற்றுமாசடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

திடிரென மிகக் கடுமையாக காற்று மாசடைந்திருப்பதால், தாய்லாந்தில் பாங்காக் மற்றும் தாய் மாகாண மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

எந்த அவசியமும் இல்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீடு பாங்காக்கில் பிஎம்2.5 என்ற அளவில் இருக்கிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களுக்கு மூக்குத் திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தற்போதைய நிலையில், உலகிலேயே காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் பாங்காக் ஆறாவது இடத்தில் உள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com