விக்கிபீடியாவை முடக்கிய பாகிஸ்தான்

மத நம்பிக்கைக்கு எதிரான உள்ளடக்கத்தை நீக்கத் தவறியதாகக் கூறி பாகிஸ்தானில் பிரபல தகவல்தளமான விக்கிபீடியாவை தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
விக்கிபீடியாவை முடக்கிய பாகிஸ்தான்
Published on
Updated on
1 min read

மத நம்பிக்கைக்கு எதிரான உள்ளடக்கத்தை நீக்கத் தவறியதாகக் கூறி பாகிஸ்தானில் பிரபல தகவல்தளமான விக்கிபீடியாவை தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

விக்கிபீடியா உலகம் முழுவதும் அறியப்படும் இணைய தகவல்தளமாக இருக்கிறது. பல்வேறு நாடுகளின் பயனர்களும் இந்த தளத்தின் மூலம் தங்களது தேவையாக தகவல்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த தளத்தில் அறிவியல், கலை, இலக்கியம், பொருளாதாரம், மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின்கீழ் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. 

இந்நிலையில் மத நம்பிக்கைகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதால் விக்கிபீடியா தளத்தை முடக்கி பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மத விவகாரங்களுக்கு எதிரான சட்டங்களை பாகிஸ்தான் அரசு சமீபத்தில் கடுமையாக்கியது.

இஸ்லாம் மதத்தை குறித்தும், இஸ்லாமியக் கடவுளுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவிப்பவர்களை தூக்கிலிடும் வகையில் இந்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இணைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை மத நம்பிக்கைகளுக்கு எதிரான அவதூறு தொடர்பான உள்ளடக்கங்களை 48 மணிநேரத்திற்குள் நீக்கக் கோரியிருந்தது. 

எனினும் பாகிஸ்தானின் அறிவுறுத்தலை விக்கிபீடியா ஏற்க மறுத்தது. அதனைத் தொடர்ந்து விக்கிபீடியா தளத்தை பாகிஸ்தான் அரசு முடக்குவதாக அறிவித்தது. இதன்மூலம் விக்கிபீடியா தளத்தை பாகிஸ்தானியர்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கு எதிராக பாகிஸ்தான் அரசு செயல்படுவதாக தெரிவித்துள்ள விக்கிபீடியா தங்கள் மீதான தடையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com