30 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

30 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

Bobi, 30, has taken the Guinness World Records title for World's Oldest Living Dog from Spike, a 23-year-old Chihuahua who received the honor in January


போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த நாய்க்குட்டிக்கு உலகின் மிகப் பழமையான நாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

30 வயதான போபி, 23 வயதான சிஹுவாஹுவா என்ற ஸ்பைக்கிடம் இருந்து, உலகிலேயே மிகவும் அதிக நாள்கள் வாழும் நாய்க்கான உலக சாதனைப் படைத்து  ஜனவரி மாதம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 

உலகின் மிக வயதான நாய் ஸ்பைக் சிஹுவாஹுவா என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த சில நாள்களுக்குப் பிறகு, புதிய சாதனை படைத்துள்ளது பேபி.

கின்னஸ் உலக சாதனைகளின்படி, Rafeiro do Alentejo  என்ற இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14 வயது வரை மட்டுமே வாழ்பவை. ஆனால், இதே இனத்தைச் சேர்ந்த இந்த பேபி நாய், பிப்ரவரி 2 ஆம் தேதி 30 ஆண்டுகள் மற்றும் 267 நாள்கள் வாழ்ந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 1939 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு நாய் 29 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது பேபி அந்த நாயின் சாதனையை முறியடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com