மீண்டும் காதலில் விழுந்தார் பில் கேட்ஸ்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனருமான பில் கேட்ஸ், சக டென்னிஸ் ஆர்வலரும் சமூக ஆர்வலருமான பௌலா ஹர்டுடன் காதலில் விழுந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்


உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனருமான பில் கேட்ஸ், சக டென்னிஸ் ஆர்வலரும் சமூக ஆர்வலருமான பௌலா ஹர்டுடன் காதலில் விழுந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

67 வயதாகும் பில் கேட்ஸ், அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பௌலா ஹர்டுடன் ஒன்றாக டென்னிஸ் போட்டியை ரசித்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

இவருக்கும் நெருங்கிய வட்டாரங்களும், இவர்களது காதலை உறுதி செய்திருப்பதாக சில பொழுதுபோக்கு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், பௌலா ஹர்டு இதுவரை பில் கேட்ஸின் பிள்ளைகளை நேரடியாக சந்திக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டெய்லி மெயில்தான் இவர்களது காதல் பற்றி முதல் செய்தியை பகிர்ந்திருந்தது. இருவருக்கும் நெருங்கிய நட்பு வட்டாரங்களும் இதனை உறுதி செய்திருப்பதாக மேற்கோள்காட்டப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் ஓராண்டுக்கும் மேலாக ஒன்றாக இருப்பதாகவும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகவும் அவர்களது நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த பௌலா ஹர்டு?
60 வயதாகும் பௌலா ஹர்டு, ஆரக்கிள் நிறுவனத்தின்  முன்னாள் நிர்வாகி மறைந்த மார்க் ஹெர்டுவின் மனைவி. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஹர்டுடன் திருமணம் முடிந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபரில் ஹர்டு மரணமடைந்தார்.  

சூசகமாகக் கூறியிருந்த பில் கேட்ஸ்..
அண்மையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த பில் கேட்ஸ், டேட்டிங் குறித்து வெளிப்படையாக இருப்பதாகக் கூறியிருந்தார். மீண்டும் உங்கள் வாழ்க்கையில் மிகவும் விருப்பத்துக்குரியவர் ஒருவர் வருவாரா என்ற கேள்விக்கு.. நிச்சயமாக, நான் ஒன்றும் ரோபோ இல்லை என்று பதிலளித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com