பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க சீனா ஒப்புதல்!

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா,  பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தார் இன்று தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு  கடனுதவி வழங்க சீனா ஒப்புதல்!


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தார் இன்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இடமிருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கோரும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வரி வருவாயை உயர்த்தும் நோக்கில் பாகிஸ்தான் பேரவையில் ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றிய பிறகு, சீன மேம்பாட்டு வங்கி இந்தக் கடனுக்கான உதவியை அளிக்க முன்வந்துள்ளது.

இந்தத் தொகையானது இந்த வாரம் பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியிடம் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடனுதவி  மூலம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் என பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தார் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

பிப்ரவரி 10ஆம் தேதி நிலவரப்படி, மத்திய வங்கியிடம் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில், இந்த நிதியானது வெறும் மூன்று வார இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானதாக இருக்கும் என தெரிவித்தது பாகிஸ்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com