பிரேசில்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு!

பிரேசில் நாட்டில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 
பிரேசில்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு!
Published on
Updated on
1 min read

பிரேசில் நாட்டில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக அந்நாட்டின் சவொ பாலோ மகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் மாயமாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 

நிலச்சரிவில் சிக்கிய மூன்று குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 28 பேர் ஞாயிற்றுக்கிழமை முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சாவ் பாலோ நகரில், கடந்த 24 மணி நேரத்தில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிக மழை பதிவாகியுள்ளது. 

பிரேசிலின் கடற்படை சாவ் பாலோ நகருக்கு வடகிழக்கே 190 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் நடமாடும் துறைமுகத்தை அமைத்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சாலைகளிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com