ஈரானில் பெண்கள் கல்வி கற்பதை தடுக்க விஷத் தாக்குதல்?
ஈரானில் கடந்த 3 மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த நூறுக்கும் அதிகமான மாணவிகள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.


ஈரானில் கடந்த 3 மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த நூறுக்கும் அதிகமான மாணவிகள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
நாட்டில் பெண்கள் கல்வி கற்கும் பள்ளிகளை மூடுவதற்காக விஷத் தாக்குதல் மூலம் மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரானில் கலாசார பிரிவு போலீஸுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் அந்தப் பிரிவை அரசு திரும்பப் பெற்றது.
இந்நிலையில், தற்போது பள்ளி மாணவிகளை இலக்காக கொண்டு விஷத் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகும் மாணவிகளுக்கு தலைவலி, படபடப்பு, உடல்சோா்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. குளோரின் அல்லது சுத்திகரிப்பு திரவம் உள்ளிட்ட மணத்தை உணா்ந்ததாக அவா்களில் சிலா் தெரிவித்தனா்.
ஈரானில் நவம்பா் மாதம் குளிா்காலமாகும். இரவு நேரங்களில் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே சென்றுவிடும். பல பள்ளிகளின் வகுப்பறைகள் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தப்படுகின்றன. அப்போது வெளியேறிய காா்பன் மோனாக்ஸைடு வாயுவால் மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. டெஹ்ரான், கோம், போரூஜொ்ட் உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, ஈரானின் தலைமை வழக்குரைஞா் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டாா். ஈரானின் நுண்ணறிவு அமைச்சகமும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
கோம் பள்ளியில் உள்ள மாணவிகள் விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, பெண்களுக்கான பள்ளிகளை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலா் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் துணை அமைச்சா் யூன்ஸ் பனாஹி தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பாா்டிஸ் பகுதியில் உள்ள பெண்களுக்கான பள்ளியிலும் செவ்வாய்க்கிழமை இத்தகைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தால் இணைய சேவைகள் முடக்கப்பட்டதால் பாதிப்பு குறித்து உறுதியான தகவல்களைப் பெறுவதில் கடினமான சூழ்நிலை நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...