உக்ரைனில் போரிட மறுத்த ரஷிய வீரருக்கு 5 ஆண்டு சிறை!

உக்ரைனில் போரிட மறுத்த இளம் ராணுவ வீரர் ஒருவருக்கு ரஷிய ராணுவ நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உக்ரைனில் போரிட மறுத்த ரஷிய வீரருக்கு 5 ஆண்டு சிறை!
Published on
Updated on
1 min read


மாஸ்கோ: உக்ரைனில் போரிட மறுத்த இளம் ராணுவ வீரர் ஒருவருக்கு ரஷிய ராணுவ நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மார்செல் காந்தரோவ் (24) என்ற அந்த வீரர் "சிறப்பு ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க விரும்பவில்லை" என்றும், மே 2022 இல் பணி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் சட்ட அமலாக்கப் பிரிவினர், செப்டம்பர் மாதம் மார்செல் காந்தரோவை கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மாஸ்கோவிற்கு வெளியே அணிதிரட்டப்பட்ட படைவீரர்களின் பயிற்சியில் வீரர் "தனது அதிருப்தியை" வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

உக்ரைன் மீது நடத்தி வரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக சுமார் 3 லட்சம் வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டு, அதன்படி புதிதாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ரஷியாவிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவ பணிக்கு பயந்து வெளியேறினர். பலர் ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றனர் என்பது குறிப்
பிடத்தக்கது.

அணி திரட்டவர்களுக்கு போர்க்கள அனுபவம் இல்லை என்றும் போர்களத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு சிறிய அளவிலான பயிற்சி பெற்றவர்கள் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com