எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

கட்டடக் கலைஞரை மணந்தார் ஜோர்டன் இளவரசர்!

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் என்பவரை வியாழன் அன்று திருமணம் செய்துகொண்டார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:32 am IST

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் என்பவரை வியாழன் அன்று திருமணம் செய்துகொண்டார்.  இந்த விழா தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்றது.

மணமகள் ராஜ்வா அல் சைஃப்  அவருக்கென சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருந்தார். அவர், பட்டத்து இளவரசரின் மறைந்த பெரிய பாட்டிக்காக 1968 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் V காரில் சஹ்ரான் அரண்மனைக்கு வந்தார். பட்டத்து இளவரசர் ஹுசைன் ராணுவ சீருடையை அணிந்திருந்தார்.

2009 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட இளவரசர் ஹுசைன்(28), ஒரு முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்வா அல் சைஃப்(29)-ஐ திருமணம் செய்து கொண்டார்.

சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, ராணி ரானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் மன்னர்கள், ராணிகள், இளவரசிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதுமணத்தம்பதியினரின்  திருமண ஊர்வலம் நடைபெற்றது. மக்கள் கூட்டம் அலைமோதுவதை தடுக்க நேற்று அரசு விடுமுறையை அரசு அறிவித்து இருந்தது.

இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், நேற்று வெகுவிமர்சையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஜோர்டன் அரச திருமணத்தின் விருந்தினர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன், வளைகுடா மன்னர்கள், நெதர்லாந்தின் மன்னர் மற்றும் உறுப்பினர்கள் போன்ற  முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.