சீனாவில் உள்ள உணவகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
டிராகன் படகு திருவிழா ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாள்களுக்கு பொது விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
விடுமுறையை தொடர்ந்து மின்சுவான் நகரில் உள்ள பிரபல பார்பிக்யூ உணவகத்தில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அந்த சமயத்தில் உணவகத்தின் எரிவாயு உருளை வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு உணவகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 31 பேர் சடலமாகவும், 7 பேர் படுகாயங்களுடனும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிக்க | ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி; ஜில் பைடனுக்கு வைரம்: மோடியின் பரிசு!
இந்த சம்பவத்தில் அருகிலிருந்த சில கட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த மக்களும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

