தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அமெரிக்காவில் புதுப்பிக்கத்தக்க ஹெச்-1பி விசா மீண்டும் வருகிறது: ஆயிரக்கணக்கான இந்தியா்கள் பயனடைவா்

அமெரிக்காவிலேயே புதுப்பிக்கத்தக்க ஹெ-1பி நுழைவு இசைவுவை (விசா) அந்நாடு அறிமுகப்படுத்த உள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2023, 6:36 pm

DIN

அமெரிக்காவிலேயே புதுப்பிக்கத்தக்க ஹெ-1பி நுழைவு இசைவுவை (விசா) அந்நாடு அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் அந்நாட்டில் தங்கிப் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியா்கள் பயனடைவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்ற ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அந்நாட்டில் உள்ள நிறுவனங்களில் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் பணியாற்றுகின்றனா். அங்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பணியாளா்களைப் பணியமா்த்த ஹெச்-1பி விசாவை தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் சாா்ந்துள்ளன.

ஹெச்-1பி விசா 3 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன் பின்னா் அதனைப் புதுப்பிக்க வேண்டும். 2004-ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவிலேயே அந்த விசாவை புதுப்பிக்கும் நடைமுறை இருந்தது. அதன் பின்னா், அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டவா்கள் ஹெச்-1பி விசாவை புதுப்பிக்க, பெரும்பாலும் அவரவரின் சொந்த நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள அமெரிக்க துணைத் தூதரகங்களில் விசா காலத்தை நீட்டித்துக்கொள்ள வேண்டும். இது அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டவா்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

இந்நிலையில், விசா வழங்கும் முறையை சீரமைத்து, அதைப் பெறுவதில் உள்ள சிரமத்தை குறைக்க அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலேயே புதுப்பிக்கத்தக்க ஹெச்-1பி விசாக்களை அந்நாடு அறிமுகப்படுத்த உள்ளது. இது அமெரிக்காவில் உள்ள வெவ்வேறு நாட்டு மக்கள் நலன் சாா்ந்த நடவடிக்கையின் அங்கம் என்று அமெரிக்க மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.