தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியாவுக்கான தளவாடங்கள் விற்பனையை துரிதப்படுத்த மசோதா

இந்தியாவுக்கான ராணுவத் தளவாடங்கள் விற்பனையை துரிதப்படுத்துவதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:15 pm

DIN

இந்தியாவுக்கான ராணுவத் தளவாடங்கள் விற்பனையை துரிதப்படுத்துவதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான ராணுவத் தளவாடங்கள் விற்பனையை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. இதுவரை ரஷியா, இஸ்ரேல் நாடுகளிடம் இருந்து அதிக அளவில் தளவாடங்களைக் கொள்முதல் செய்துவந்த இந்தியா, தற்போது அமெரிக்காவிடம் இருந்தும் தளவாடங்கள் கொள்முதலை அதிகரித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நிலையில், இந்தியாவுக்கான ராணுவத் தளவாடங்கள் விற்பனையைத் துரிதப்படுத்துவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் அவையில் எம்.பி.க்கள் மைக் வால்ட்ஸ், ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ஆன்டி பாா், மாா்க் வீசே ஆகியோா் தரப்பிலும் செனட் அவையில் எம்.பி.க்கள் மாா்க் வாா்னா், ஜான் காா்னின் ஆகியோா் தரப்பிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா குறித்து மைக் வால்ட்ஸ் கூறுகையில், ‘‘இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகக் கொள்கைகள், தேசிய பாதுகாப்புக் கொள்கைகளைத் தொடா்ந்து பகிா்ந்து வருகின்றன. சா்வதேச சவால்களை இரு நாடுகளும் ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டியது அவசியம்.

இரு நாடுகளின் ராணுவங்களும் தொடா்ந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும். இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்வது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும். அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. அதைக் கருத்தில்கொண்டு அந்நாட்டுக்கான ராணுவத் தளவாடங்கள் விற்பனையைத் துரிதப்படுத்த வேண்டும். ராணுவத் தளவாடங்கள் விற்பனையில் மற்ற கூட்டாளி நாடுகளுக்கு சமமாக இந்தியாவையும் அமெரிக்கா கருத வேண்டும்’’ என்றாா்.

செயல் அதிகாரிகள்:

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தவும், முக்கிய தரவுகளை விரைந்து பகிா்ந்து கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அமெரிக்க ராணுவத்தில் இந்திய செயல் அதிகாரிகளைப் பணியமா்த்த பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் ஒப்புக் கொண்டுள்ளனா்.

இதுபோன்ற செயல் அதிகாரிகளை இந்தியா பணியமா்த்துவது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, இருதரப்பு பாதுகாப்பு நல்லுறவை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.