மெக்ஸிகோவை வதைக்கும் கடுமையான வெப்பம்: 100 பேர் பலி!

மெக்ஸிகோவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
மெக்ஸிகோவை வதைக்கும் கடுமையான வெப்பம்: 100 பேர் பலி!

மெக்ஸிகோவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 

கடந்த 10 நாள்களில் பல்வேறு இடங்களில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், சில மாகாணங்களில் 50 டிகிரி செல்சியஸ் அதாவது 122 பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. அதிக வெப்பநிலை காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளன. 

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வெப்பம் தொடர்பாக ஒரு இறப்பு மட்டும் பதிவான நிலையில், இந்தாண்டு பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது. வடக்கு மாநிலமான நியூவோ லியோனில் சுமார் 64 சதவீதம் பேர் ஹீட் ஸ்டோக் எனப்படும் வெப்ப பக்கவாத நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள இறப்புகள் பெரும்பாலானவை அண்டை மாநிலங்களான தமாலிபாஸ் மற்றும் வெராக்ரூஸ் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன. 

சில வடக்கு நகரங்களில் தொடர்ந்து அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. சோனோரா மாநிலத்தில் உள்ள அகோஞ்சி நகரத்தில் கடந்த புதன்கிழமை 49 டிகிரி செல்சியஸ்(120 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது. ஒரு சில பகுதியில் உள்ள மக்கள் அதிக வெப்பம் காரணமாக வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

பகல் நேரங்களில் மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மார்பா பாலைவனத்தில் 16 உதவி நிலையங்களை அமெரிக்க எல்லை ரோந்து படை நிலை நிறுத்தியுள்ளது. கடும் வெயில் காரணமாக அமெரிக்க எல்லைக்குள் நுழையும் புலம் பெயர்ந்தோருக்கு இந்த குழு உதவி வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com