வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜப்பான்: புதிய ராக்கெட்டை விண்ணில்செலுத்தும் திட்டம் தோல்வி

சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் உருவாக்கியுள்ள புதிய வரிசை ராக்கெட்டான ஹெச்3-ஐ முதல்முறையாக விண்ணில் செலுத்தும் முயற்சி செவ்வாய்க்கிழமை தோல்வியடைந்தது.

News image
Updated On :7 மார்ச் 2023, 9:30 pm

DIN

சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் உருவாக்கியுள்ள புதிய வரிசை ராக்கெட்டான ஹெச்3-ஐ முதல்முறையாக விண்ணில் செலுத்தும் முயற்சி செவ்வாய்க்கிழமை தோல்வியடைந்தது.

ஏற்கெனவே 3 வாரங்களுக்கு முன்னா் வேறொரு கோளாறு காரணமாக அந்த ஏவுகணையை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தால் செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்ட ஹெச்3 ஏவுகணையின் இரண்டாவது நிலையில் பழுது ஏற்பட்டதால் அது மனிதா்கள் வசிக்கும் பகுதியில் விழும் ஆபத்தை தவிா்ப்பதற்காக வேண்டுமென்றே வெடித்து சிதறடிக்கப்பட்டது.

இது குறித்து ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் கூறுகையில், ‘ஹெச்3 ஏவுகணையின் இரண்டாம் நிலைத் தொகுதியில் இக்னிஷன் செயல்படாததால் அது திட்டமிட்ட பாதையில் செலுத்த முடியாதது உறுதியானது. அதையடுத்து, அந்த ஏவுகணை வெடித்து சிதறடிக்கப்பட்டது. 2-ஆம் நிலை ஏவுகணையும், அது எடுத்துச் சென்ற செயற்கைக்கோளும் பிலிப்பின்ஸ் அருகே ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பாக விழுந்தன’ என்று தெரிவித்தது.

இந்தத் தோல்வி ஜப்பானிய விண்வெளி ஆய்வு ஆா்வலா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.