நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு அருகே வியாழக்கிழமை காலை ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


நியூசிலாந்து, கெர்மாடெக் தீவு அருகே வியாழக்கிழமை காலை ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மாடெக் தீவு அருகே வியாழக்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகி உள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், 300 கிமீ சுற்றளவுவிற்கு மக்கள் யாரும் வசிக்காத இந்த தீவின் கரையோரபகுதிகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.
புதன்கிழமை வெலிங்டன் அருகே ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் உணரப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு சமீபத்திய நிலநடுக்கம் வந்துள்ளது.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து: 17 பேர் பலி, 7 பேர் காயம்
நியூசிலாந்து அடிக்கடி ஏன் பூகம்பத்திற்கு ஆளாகிறது?
நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. இருப்பினும், நாடு முழுவதும் நிலநடுக்க அளவில் மாறுபாடு உள்ளது. நியூசிலாந்தின் நில அதிர்வுப் பகுதிகளில் வெலிங்டனில் மிகவும் அதிகமாகவும், ஆக்லாந்து குறைவாகவும் காணப்படும் பகுதிகளாக உள்ளது.
ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் தீவிர நில அதிர்வு நடவடிக்கையின் விளிம்பில் தீவு நாடு உள்ளதால், நியூசிலாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...