பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு

ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :11 மே 2023, 2:47 am

DIN

டோக்கியோ: ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4:16 மணிக்கு பூமிக்கு 40 கி.மீ அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.