கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்பந்துப் போட்டி: எல் சால்வடாரில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானார்கள். 

News image
கோப்புப் படம்
Updated On :21 மே 2023, 10:48 am

DIN

எல் சால்வடாரில் கால்பந்து மைதானத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானார்கள். 

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு எல் சால்வடார். இந்த நாட்டில் சால்வடார் லீக் என்ற பெயரில் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கஸ்கட்லானில் உள்ள நினைவுச்சின்ன மைதானத்தில் நடைபெற்ற அலியன்சா மற்றும் எஃப்ஏஎஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடினர். 

அப்போது ஒரு நுழைவுவாயிலில் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எல் சால்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.