இஸ்ரேலுக்கு எதிரான போரில் இணைந்த யேமன்!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் யேமனில் செயல்பட்டுவரும் ஹவுதி அமைப்பு களமிறங்கியுள்ளது.  
இஸ்ரேல் - காஸா போர்
இஸ்ரேல் - காஸா போர்

இஸ்ரேலுக்கு எதிரான போரில் யேமனில் செயல்பட்டுவரும் ஹவுதி அமைப்பு களமிறங்கியுள்ளது.  

ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், யேமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த ஏவுகணை தாக்குதலுக்கு யேமனின் ஹவுதி போராட்டக்காரர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளனர். ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா அவரது எக்ஸ் பக்கத்தில் பாலஸ்தீன சகோதர்களுக்கு ஆதரவான எங்கள் தாக்குதல் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் செங்கடல் சுற்றுலாத் தளமான ஈலாட்டை அழிப்பதை நோக்கமாக கொண்டு நடந்துள்ளதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், யேமன் நாட்டின் சனாவில் இருந்து இந்த தாக்குதலை ஹவுதி அமைப்பு நடத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினர், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

காஸாவிலிருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி, 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை அடியோடு ஒழிக்க இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com