ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸாவில் பலி 9,061 ஆக உயர்வு! இதில் 3,760 குழந்தைகள், 2,326 பேர் பெண்கள்!!

இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 9,061 ஆக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

News image
Updated On :2 நவம்பர் 2023, 11:39 am

DIN

இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 9,061 ஆக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 27 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

Story image

இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் படையினருக்கு பதிலடியாக காஸா முற்றிலும் அளிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 

Story image

இந்நிலையில், இந்த போரில் காஸாவில் உயிரிழப்பு 9,061 ஆக அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில் 3,760 பேர் குழந்தைகள், 2,326 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 195 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 120 பேரைக் காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதல் 'போர்க்குற்றம்' என்று ஐ.நா. கூறியுள்ளது. 

Story image

இஸ்ரேல் தரப்பில் 1,400 உயிரிழப்புகள் என்றும் அதில் 332 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.