காஸாவுக்குள் படிப்படியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது காஸாவை சுற்றிவளைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 28 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் படையினருக்கு பதிலடியாக காஸாவை முற்றிலும் அளிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இந்த போரில் பாலஸ்தீனியர்கள் தரப்பில் உயிரிழப்பு 9,061 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,760 பேர் குழந்தைகள், 2,326 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | காஸாவிலிருந்து 7,000 பேரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவிப்பு
இந்நிலையில் காஸா நகரம் முழுவதையும் சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதனால் இஸ்ரேல் தாக்குதலின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
இஸ்ரேல் தரப்பில் இதுவரை 335 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜெனின் அகதிகள் முகாமிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


