தலைவலியாகும் டீப் பேக் தொழில்நுட்பம்: எச்சரிக்கும் பிரிட்டன் உளவு அமைப்பு!

பிரிட்டன் தேர்தலுக்குச் செயற்கை தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக அமையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு
Published on
Updated on
1 min read

பிரிட்டனின் இணைய பாதுகாப்பு முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்  அடுத்து வரவிருக்கும் அந்நாட்டின் தேர்தலுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என எச்சரித்துள்ளது.

மேலும், இணையவழி தாக்குதல்கள் எதிரி நாடுகளால் மேற்கொள்ளப்படுவதும் அவற்றின் ஆதரவு ஹேக்கர்களால் அது விரிவடைவதையும் அவற்றை பின்தொடர கடினமானதாக மாறுவதையும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய இணைய பாதுகாப்பு மையம், இந்த ஆண்டு புதிதாக உருவாகியிருக்கும் அபாயம் - அரசுகளின் ஆதரவில் இயங்கும் இணைய அமைப்புகள்தாம். இவற்றால் தேசத்தின் உள்கட்டுமான பிரிவுகளான நீர்,  மின்சாரம் மற்றும் இணைய ஒருங்கிணைப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடும் என எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பை கருத்தியல்ரீதியாகவோ மனிதாபிமானரீதியாகவோ இல்லாமல் பொருளியல்ரீதியாக முன்னெடுக்கும் அரசு சார்பு அமைப்புகள் கடந்த ஆண்டு உருவாகியிருப்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

2025-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் பிரிட்டன் தேர்தலையும் அதன் முடிவுகளையும் வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாதிக்கும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

டீப் பேக் தொழில்நுட்பத்தால் யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் பொய்யான தகவல்களை உருவாக்கவும் எளிதில் நம்ப செய்யவும் இயலும்.

இதற்கு மாற்றாக முன்னர் இருந்த வாக்கெடுப்பு முறையான பென்சில், தாள் கொண்டு வாக்கெடுப்பு எடுப்பது மட்டுமே இந்த ஹேக்கர்களால் ஒன்றும் செய்ய இயலாது எனத் தெரிவிக்கிறது, இந்த முகமையின் அறிக்கை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com