

காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாள்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து 42வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. காஸாவில் வான் வழி, கடல் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்திவருகிறது.
காஸாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை மூன்றாவது நாளாக இஸ்ரேல் ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் மறைந்துள்ள ஹமாஸ் படையினரை தேடும் பணிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவமனையிலுள்ள ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவதற்காக மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், காஸா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், பிற்ந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இரண்டு எரிபொருள் வாகனங்களை மருத்துவமனைக்காக இஸ்ரேல் ராணுவம் காஸாவினுள் அனுமதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.