ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு
ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோமீட்டர் தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 73 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 எனப் பதிவாகியுள்ளது.
நடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
வறுமை மிகுந்து காணப்படும் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மேற்கு வங்கம்: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
அக்டோபா் 7-ஆம் தேதி ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து அக்டோபர் 13 மற்றும் 15ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...