பிலிப்பின்ஸில் அமைதிக்கான பேச்சு: அரசு, போராளிகள் ஒப்புதல்

பிலிப்பின்ஸில் தொடரும் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க பிலிப்பின்ஸ் அரசும் கம்யூனிஸ்ட் போராளிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆஸ்லோவில் உடன்பாட்டுக்குப் பிறகு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் இருதரப்பு பிரதிநிதிகள்...
ஆஸ்லோவில் உடன்பாட்டுக்குப் பிறகு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் இருதரப்பு பிரதிநிதிகள்...

கோபன்ஹேகன் (டென்மார்க்): பிலிப்பின்ஸில் தொடரும் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க பிலிப்பின்ஸ் அரசும் கம்யூனிஸ்ட் போராளிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பின்ஸில் நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கும் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முடித்துவைக்கும் நோக்கில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக நார்வே சமரசக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் கடந்த வாரம் இரு தரப்பு உயர்நிலைக் குழுவினரும் சந்தித்துப் பேசியதாகவும் அமைதி திரும்பச் செய்யும் விருப்பத்தை இரு தரப்பும் ஒப்புக்கொண்டு தடைகளை அகற்ற முடிவு செய்ததாகவும் நார்வே வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 

இதுபற்றிய ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமையே இரு தரப்பினரிடையே கையெழுத்திடப்பட்டபோதும் இன்று செவ்வாய்க்கிழமைதான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸில் 1969 ஆம் ஆண்டிலிருந்து ஆளும் அரசுகளுக்கு எதிராக பிலிப்பின்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் ஆயுதந்தாங்கிய அமைப்பான புதிய மக்கள் ராணுவமும் போராடிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவுடனான நெருங்கிய உறவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இவர்கள், அரசில் இடதுசாரிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை போராளிகளும் பொதுமக்களுமாக 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com