வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் தங்கியிருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2023, 10:49 am

DIN


இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் தங்கியிருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியிருக்கிறது.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாகவும், 50க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்,  இஸ்ரேலில் 18000 இந்தியர்கள் இருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 900 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டு அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், மிகவும் அவசியமின்றி, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.