வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மக்களுக்கு ஆற்றிய உரையில், அமெரிக்கர்களை இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்குப் பின்னால் நிற்குமாறு அழைப்பு விடுத்தார்.
ஓவல் அலுவலகத்தில் இருந்து தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து உரையாற்றுகையில், ஹமாஸ் அமைப்பையும் ரஷ்யாவையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
இதையும் படிக்க.. கணவர் மற்றும் குடும்பத்தினர் 4 பேரை விஷம் வைத்துக் கொன்ற விஞ்ஞானி
ஹமாஸ் அமைப்பும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் வெவ்வேறு வகையான அபாயங்கள், ஆனால், அவர்கள் ஒரே ஒரு விஷயத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள், அதுதான், அண்டை நாடுகளின் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி அதனை முற்றிலும் அழித்தொழிப்பது என்பது என்று குறிப்பிட்டார்.
இந்த உரையில், இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவும் என்பதையும் தெரிவித்துக்கொண்டுள்ளார். ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை "அழிப்பதற்கு" தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜோ பைடன்.
ஒரு பெரிய தேசம் என்ற அளவில், நமது பொறுப்பில் வெறுப்பு அரசியலுடன், சிறு பாகுபாட்டைக் கூட நாம் அனுமதிக்க முடியாது. ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளையும், புதின் போன்ற கொடுங்கோலர்களையும் வெற்றி பெற விட்டுவிட முடியாது, விடவும்மாட்டோம். அதை நான் அனுமதிக்க மறுக்கிறேன்" என்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
இந்த உரையின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கர்களை இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்குப் பின்னால் நிற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரோஹிணி பிஎஸ்எஃப் ஊழியரின் 12 வயது மகள் கடத்தல்: போலீஸாா் விசாரணை

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.78 கோடி

மாா்ச் 23- ல் தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் தொடக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டா் விற்பனை நிலைங்கள் அருகே பலத்த பாதுகாப்பு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

