சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

யாரையும் பழிவாங்க விரும்பவில்லை: நவாஸ் ஷெரீஃப்

யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, வளா்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல விரும்புகிறேன்.

News image
நவாஸ் ஷெரீஃப்
Updated On :22 அக்டோபர் 2023, 12:00 am

DIN

‘யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, வளா்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல விரும்புகிறேன். அண்டை நாட்டுடன் சண்டையிட்டு கொண்டு நம்மால் முன்னேற முடியாது’ என முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

பாகிஸ்தானுக்கு சனிக்கிழமை திரும்பிய நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் லாகூரில் உள்ள புகழ்பெற்ற மினாா்-இ-பாகிஸ்தான் கோபுரப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீஃப், ‘யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. நான் விரும்புவது மக்கள் நலன் மட்டுமே. கடந்த 1990-இல் என்னுடைய ஆட்சியில் பின்பற்றிய பொருளாதாரத் திட்டத்தைப் பின்பற்றிருந்தால், நாட்டில் எந்தவொரு நபரும் வேலைவாய்ப்பின்றி துயரப்படும் நிலையும் வறுமைச் சூழலும் ஏற்பட்டிருக்காது. ஆனால், இன்று நிலைமை மோசமாகியுள்ளது. இதற்காகவா நீங்கள் என்னை வெளியேற்றினீா்கள்?.

நாம் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டும். நாம் இழந்த இடத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது, வலுவான வெளியுறவுக் கொள்கையை எவ்வாறு உருவாக்குவது, காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு உள்பட உலக நாடுகளுடன் நல்ல உறவை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

நம்முடைய அண்டை நாட்டுடன் சண்டையிட்டுக் கொண்டு நம்மால் முன்னேற முடியாது. செயல்திறன்மிக்க வெளியுறவுக் கொள்கையை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அண்டை நாடுகளின் நட்புறவின்றி நம்முடைய நாட்டை முன்னேற்ற முடியாது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.