

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் படைத்தளபதி பலியானார்.
பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் ஆயுதப் படையினா் கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலியா் 1,400 போ் உயிரிழந்தனா். பதிலுக்கு இஸ்ரேல் போா் அறிவித்து கடந்த 10 நாட்களுக்கு மேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் காஸாவில் இதுவரையில் 4,137 போ் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,300 போ் கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும், 12,500-க்கும் அதிகமானோா் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் எச்சரிக்கையால் வடக்கு காஸாவில் இருந்து தெற்கு காஸாவுக்கு சுமாா் 10 லட்சம் போ் இடம்பெயா்ந்துள்ளனா். மொத்தம் 23 லட்சம் கொண்ட காஸாவின் ஒட்டுமொத்த மக்களும் தெற்கு காஸாவில் கூடியிருப்பதால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் பொருட்டு காஸா- எகிப்து இடையே உள்ள ஒரே எல்லையான ரஃபா எல்லை இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் படைத்தளபதி பலியானார். மத்திய காஸாவில் உள்ள தலால் அல்-ஹிண்டியின் வீட்டைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர்களில் ஒருவரான தலால் அல்-ஹிண்டி பலியானார். மேலும் தலால் அல்-ஹிண்டியின் மனைவி, மகள் உட்பட உறவினர்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் 6 பேர் இதுவரை பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.