எகிப்து, ஜோர்தானுக்கு பயணிக்க வேண்டாம்: இஸ்ரேல் எச்சரிக்கை!

காஸா மீதான தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவுவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வெடித்துள்ளது. 
எகிப்து, ஜோர்தானுக்கு பயணிக்க வேண்டாம்: இஸ்ரேல் எச்சரிக்கை!


எகிப்து, ஜோர்தான் நாடுகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என தம் நாட்டு குடிமக்களுக்கு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

காஸா மீதான தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவுவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வெடித்துள்ளது. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் 15வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இப்போரின் அடுத்தகட்டமாக காஸா எல்லையில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சிறப்புப் படையினரையும் காஸா எல்லையில் நிலைநிறுத்தியுள்ளது. 

இந்நிலையில், எகிப்து, ஜோர்தான் நாடுகளிலுள்ள குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் 4ஆம் கட்ட (அதிகபட்ச எச்சரிக்கை) பயண எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், அந்நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், அங்கிருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியிலுள்ள தங்கள் நாட்டு வீரர்களை நாடு திரும்ப இஸ்ரேல் வலியுறுத்தியதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com