அமெரிக்க கொலையாளி எங்கே? பூட்டிய வீடுகளுக்குள் மக்கள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க கொலையாளி எங்கே?
அமெரிக்க கொலையாளி எங்கே?


லெவிஸ்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய காவலர்களும் எஃப்பிஐ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மேன் மாகாணத்தில் 40 வயது நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலியான நிலையில், கடும் அதிர்ச்சிக்குள்ளான அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளையும் பூட்டிய வீடுகளுக்குள்கழிக்கும் நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூடாக இது மாறியிருக்கிறது. முதலில், குற்றவாளி ரிச்சர்ட் கார்டின் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் தேடுதல் பணி நடைபெற்றது. ஆயுதம் தாங்கிய டிரக்குகளில், எஃப்பிஐ அதிகாரிகள் உறவினர் வீடுகளை சுற்றிவளைத்து, அங்கிருப்பவர்களை சரணடையுமாறு வலியுறுத்தினர்.

ஆனால், அந்த வீட்டுக்குள் ரிச்சர்ட் கார்டு இல்லை என்று கண்டறியப்பட்டது. இது குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், இப்பகுதி அவனுடைய சொந்தஊர். அவர் இங்குதான் வளர்ந்தார், இங்கு ஒளிந்து கொள்ள ஒவ்வொரு விளிம்பையும், ஒவ்வொரு புதர்களையும் அவர் நன்கு அறிவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்பகுதியிலிருந்த பல வீடுகளை காவல்துறையினர் சோதனை நடத்தினர். அவர் கையில் ஆயுதம் இருப்பதாகவும், அவர் அபாயத்துக்குரியவர் என்பதால், யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com