டேட்டிங் செயலி, பணபரிவர்த்தனை வசதி- உருமாறும் எக்ஸ் தளம்!

எக்ஸ் தளம் எல்லவாற்றுக்குமான செயலியாக இருக்கும் என எலான் மஸ்க் முன்பு குறிப்பிட்டிருந்தது போல, இப்போது அந்த மாற்றத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
டேட்டிங் செயலி, பணபரிவர்த்தனை வசதி- உருமாறும் எக்ஸ் தளம்!


எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கி அக்.27-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொலி கூட்டத்தில், பல புதிய கருத்துருக்களை எலான் மஸ்க் முன்வைத்துள்ளார்.

சமூக வலைதளமான ட்விட்டற் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய பெரும்செல்வந்தர் எலான் மஸ்க், அலுவலகத்துக்குள் நுழையும்போது வெள்ளை நிற கழிவறை தொட்டியைக் ( பாத்ரூம் சிங்) கையில் ஏந்தி முகத்தில் புன்னகையுடன் உள்நுழைந்தார். வந்த கையோடு ட்விட்டரின் பெரும்பாலான அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ததுடன் எக்ஸ் எனவும் பெயர் மாற்றினார்.

எக்ஸ் தளம், எல்லவாற்றுக்குமான செயலியாக இருக்கும் என எலான் மஸ்க் முன்பு குறிப்பிட்டிருந்தது போல, இப்போது அந்த மாற்றத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

நீக்கப்பட்ட ட்விட்டர் பதாகைகள்
நீக்கப்பட்ட ட்விட்டர் பதாகைகள்

எக்ஸ் தளம் 2024-க்குள் முழுமையான டேட்டிங் தளமாகவும் வங்கிகளுக்கு மாற்றான டிஜிட்டல் வங்கியாகவும் மாறவுள்ளது. மக்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு பண பரிமாற்றத்திற்கான முழுமையான தளமாக எக்ஸ் மாறவுள்ளது.

அந்த கூட்டத்தில் எலான் மஸ்க், “பண பரிவர்த்தனைகள் என நான் குறிப்பிடுவது ஒருவரின் ஒட்டுமொத்த பொருளாதார வாழ்வையும் தான். பணம் என்று வந்தாலே அது நம் தளத்தில் தான். பணமோ பத்திரங்களோ (சேமிப்பு) எதுவாக இருந்தாலும். என் நண்பருக்கு 20 டாலர் அனுப்புவது மட்டுமல்ல. நான் சொல்ல வருவது உங்களுக்கு வங்கி கணக்கே வேண்டியதில்லை என்னும் அளவுக்கு நம் தளம் இருக்க வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

காதலர்கள், நண்பர்கள் சந்தித்து கொள்ள உதவும் டேட்டிங் செயலிகள் பலவும் சந்தாதாரர் அடிப்படையில் செயல்படுகின்றன.  எக்ஸ் தளம் எப்படியான டேட்டிங் செயலி என்பதை எலான் குறிப்பிடவில்லை என அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கித்துள்ளனர். இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு முதலே செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. 

கைப்பேசி செயலிகள் (கோப்பு படம்)
கைப்பேசி செயலிகள் (கோப்பு படம்)

மேலும், பிரீமியம் பிளஸ் என்கிற புதிய சந்தாதாரர் திட்டத்தை இந்தக் கூட்டத்தில் எக்ஸ் அறிவித்தது. இதன்படி ட்விட்டர் சேவைகளை விளம்பரம் இல்லாது கைப்பேசி மற்றும் இணைய வழியிலும் சேர்த்து பயன்படுத்த 16 அமெரிக்க டாலர் (ரூபாய் 1334) மாதமொன்றுக்கு சந்தாதொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை திட்டத்தில் மாதம் 3 டாலர் (ரூபாய் 250) சந்தா தொகையாக அமையும். ஆனால் அடிப்படை திட்டத்தில் விளம்பரம் இருக்கும்.

எக்ஸ், புதிதாக ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ஓராண்டில் ட்விட்டரின் பயன்பாடு, நம்பகத்தன்மை மற்றும் வருவாய் கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கிற நிலையில் இந்த புதிய அறிவிப்புகள் கைகொடுக்குமா என்பது இனி தான் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com