காஸாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் காஸாவில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 
காஸாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7-ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து காஸா பகுதியின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தற்போது வரை போரிட்டு வருகின்றனர். இந்தப் போரினால் இருதரப்பிலும் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. 

போரில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. அமைப்பும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை தொடந்து வருகின்றது. 

இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸாவில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 3,320 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்), “உடனடியான போர் நிறுத்தமும் வாழ்வாதார உதவிகளுமே குழந்தைகள் மற்றும் அந்த மக்களின் முதன்மையான தேவை, குழந்தை என்பது குழந்தை தான். எல்லா இடங்களில் இருக்கும் குழந்தைகளும் எல்லா நேரமும் பாதுக்கப்பட வேண்டும். குழந்தைகளை தாக்குதலுக்கு ஆளாக அனுமதிக்கக் கூடாது” என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com