நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காஸா சுரங்கப் பாதைகள் மக்களுக்காக அல்ல; வீரர்களுக்காக: ஹமாஸ் படை!

காஸாவில் வெட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதைகள் ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே தவிர பொதுமக்களுக்கு அல்ல என ஹமாஸ் படை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :31 அக்டோபர் 2023, 3:33 pm

DIN


காஸாவில் வெட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதைகள் ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே தவிர பொதுமக்களுக்கு அல்ல என ஹமாஸ் படை தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் மூன்று வாரங்களைக் கடந்து நீடித்து வருகிறது.

போரின் இரண்டாவது கட்டமாக, காஸாவின் முக்கிய எல்லையில் நுழைந்து இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

காஸா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 8,300 பேர் உயிரிழந்தனர். இதில், 3,457 பேர் சிறுவர் - சிறுமியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள், முதியவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சியில் பேசிய ஹமாஸ் படையைச் சேர்ந்த மெளசா அபு மார்ஸோக், தங்களின் இஸ்லாமியக் குழுவுக்கு சுரங்கப்பாதை அல்லது பதுங்குக் குழியினுள் இருந்து தாக்கும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. காஸா மக்களைக் காக்க வேண்டியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொறுப்பு. இலக்குகளிலிருந்து தப்பவும், எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் மட்டுமே சுரங்கப் பாதைகளை உருவாக்கியுள்ளோம். வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இது மட்டுமே வழி எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.