வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

டிக்கெட்டை விற்றுவிட்டு மீண்டும் வாங்கியவர்.. ஹமாஸிடம் சிக்கிய பிணைக் கைதி

இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாங்கிய டிக்கெட்டை விற்றுவிட்டு மீண்டும் வாங்கிய தகவல் கிடைத்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2023, 9:17 am

DIN


பாரீஸ்: ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பலியான கெரின் ஜர்னோ என்ற 24 வயது பெண், இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாங்கிய டிக்கெட்டை விற்றுவிட்டு மீண்டும் வாங்கிய தகவல் கிடைத்துள்ளது.

ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிரெஞ்ச்-இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமை பெற்ற விமான நிலைய ஊழியரான 24 வயது பெண் எரித்துக் கொல்லப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

அவர் திரும்ப வருவார் என்று அவரது குடும்பத்தினரின் நீண்ட எதிர்பார்ப்பு கண்ணீரோடு முடிந்துள்ளது.

அவளது வலது காலில் முறிவு ஏற்பட்டதால், இசை நிகழ்ச்சிக்கு வாங்கியிருந்த டிக்கெட்டை விற்றுவிட்டார், ஆனால், ஹமாஸ் அமைப்பினர், அந்த நிகழ்ச்சியை கொலைக்களமாக மாற்றுவதற்கு ஒருவாரம் முன்பு, மீண்டும் அவள் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வாங்கியிருந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு அவர் எடுத்த செல்ஃபி புகைப்படம் பலராலும் வருத்தத்தோடு பகிரப்பட்டு வருகிறது. கருப்பு நிற அடையில், வெற்றியின் சின்னமான வி என்பதைப் போல தனது விரலால் காட்டியபடி அவர் ஒரு செல்ஃபி எடுத்திருந்தார். அதில், ஒரு கேளிக்கை விருந்தில் பங்கேற்கும் முன் ஒருவருக்கு இருக்கும் அனைத்து கொண்டாட்ட மனநிலையோடு அவர் இருந்தார் என்பதை புகைப்படத்தைப் பார்க்கும் அனைவராலும் சொல்லாமலேயே புரிந்துகொள்ள முடியும்.

அவர் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடனமாடிய விடியோக்களும் வெளியாகியிருந்தன.

திடீரென அந்த விருந்து நிகழ்ச்சிக்குள் ஹமாஸ் அமைப்பினர் நுழைந்ததும், ஒரு காரின் பின்புறத்தில் நண்பர்களுடன் அப்பெண் ஒளிந்துகொள்கிறார். அவரது முகத்தில் கவலை தெரிகிறது. விடியோவில் பின்னணியில் வெடிகுண்டுகள் சப்தம் கேட்கும்போது, மிகுந்த மிரட்சியுடன் பக்கத்தில் இருப்பவர்களைப் பார்க்கிறார்.

இறுதியாக ஒரு விடியோவில், கதவுகள் திறந்திருக்கும் ஆம்புலன்ஸில் அவர் அமர்ந்திருக்கிறார். பிறகு, சனிக்கிழமையன்று, அவரது குடும்பத்தினருக்கு ஒரு தகவலை அவர் அனுப்புகிறார், அதில், எனது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன், உங்களை மிகவும் காதலிக்கிறேன், ஏனென்றால், நான் வீட்டுக்கு திரும்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுதான் அவர் அனுப்பிய கடைசி செய்தியாகும்.

இந்த நிலையில், இரண்டு வார காலமான, கெரின் உயிரோடு இருக்கிறாரா? எப்படி இருக்கிறாரோ? என்ற கவலையோடு அவரது குடும்பத்தினர் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் அனுப்பியிருந்தது.

அவர் இருந்த ஆம்புலன்ஸ் ராக்கெட் வீச்சினால் தாக்கப்பட்டது. அவர் பலியானார் என்று இஸ்ரேல் ராணுவம் அளித்த தகவல் குறித்து அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் அவளை எரித்துவிட்டனர் என்று அவரது சகோதரி வருத்ததுடன் குறிப்பிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.