சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இஸ்ரேல் தாக்குதல் 15,200-ஐ கடந்தது காஸா உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் 9 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 15,200-ஐ கடந்துள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் 9 வாரங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 15,200-ஐ கடந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அஷ்ரஃப் அல்-கீத்ரா சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்கிய பிறகு அந்தத் தாக்குதலில் இதுவரை 193 போ் உயிரிழந்தனா்; சுமாா் 600 போ் காயமடைந்துள்ளனா்.இதையடுத்து, காஸாவில் கடந்த அக். 7-ஆம் தேதிய முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 15,207-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 70 சதவீதத்தினா் பெண்களும், குழந்தைகளும் ஆவா்.இது தவிர, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்.காஸாவிலுள்ள சுகாதாரக் கட்டமைப்புகளையும், மருத்துவ நிலைகளையும் இஸ்ரேல் படையினா் வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.வடக்கு காஸாவில் சுமாா் 80,000 பாலஸ்தீனா்கள் உணவு, மருந்துப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனா். அவா்களுக்கு இஸ்ரேலின் குண்டுவீச்சு மேலும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.இதற்கு முன்னா் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 13,300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. ஆனால் திடீரென அந்த எண்ணிக்கை 15,207-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது தொடா்பாக செய்தித் தொடா்பாளா் அஷ்ரஃப் அல்-கீத்ரா விளக்கமெதுவும் அளிக்கவில்லை.இருந்தாலும், இஸ்ரேல் தாக்குதலால் காஸாவிலுள்ள மருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்பட்டதாலும், தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டதாலும் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் கடந்த மாதம் 11-ஆம் தேதிக்குக்குப் பிறகு முழுமையான உயிரிழப்புகள் மற்றும் பிற பாதிப்புகள் குறித்த விவரங்களை வெளியிட முடியவில்லை.ஆங்காங்கே கிடைக்கும் தகவல்களைக் கொண்டே தாக்குதல் பாதிப்பு விவரங்களை அமைச்சகம் வெளியிட்டு வந்தது. எனவே, இதுவரை நிலுவையில் இருந்த மரணங்கள் பற்றிய பழைய தகவல்கள் தற்போது திரட்டப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை திடீரென உயா்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.காஸா உயிரிழப்புகள் குறித்து பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும் புள்ளிவிவரங்கள் குறித்து சிலா் சந்தேகம் எழுப்பினாலும், அவை நம்பிக்கைக்கு உரியவை என்றே அங்குள்ள சா்வதேச அமைப்புகள் கூறி வருகின்றன.முந்தைய காஸா போா்களின்போது அமைச்சகம் வெளியிட்ட உயிரிழப்பு விவரங்கள் ஐ.நா. மற்றும் இஸ்ரேலின் புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போனது குறிப்பிடத்தக்கது...பெட்டிச் செய்தி...தொடரும் பொதுமக்கள் துயரம்காஸாவில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வலியுறுத்தியும், அந்தப் பகுதியில் மக்கள் நெருக்கம் மிக்க பகுதியில் கடந்த 2 நாள்களாக இஸ்ரேல் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான 7 நாள் சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து கடந்த 2 நாள்களில் காஸாவிலுள்ள 400 நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.ஏற்கெனவே காஸா போா் தொடங்கிய பிறகு வடக்கு காஸாவிலிருந்து தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தெற்குப் பகுதிதான் பாதுகாப்பான இடம் என நம்பி ஏறத்தாழ அழைத்து காஸா மக்களும் அந்தப் பகுதிக்குச் சென்றனா்.இந்த நிலையில், தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரிலும் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்னதாக அந்த நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டு இஸ்ரேல் விமானங்கள் துண்டுப் பிரசுரங்களை வீசினாலும், அங்கிருந்து யாரும் வெளியேறியதாகத் தெரியவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.வடக்கு காஸாவிலிருந்து தெற்குப் பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்தும் வெளியேறச் சொன்னால் பொதுமக்கள் செல்வதற்கு வேறு இடமில்லை என்று கான் யூனிஸ் அகதிகள் முகாமில் வசிப்பவா்கள் தெரிவித்தனா்.பிளிங்கன் திட்டவட்டம்: இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு தவிா்க்கப்படுவது மிகவும் முக்கியம் என்று மேற்கு ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் சனிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.அமெரிக்காவின் இந்த வலியுறுத்தலை ஏற்று பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழித்தடம் என்று கூறி இணையதளத்தில் வரைபடம் ஒன்றை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. எனினும், காஸா பகுதியை நூற்றுக்கணக்கான பாகங்களாகப் பிரித்து, அதற்கு எண்கள் இடப்பட்டுள்ள அந்த வரைபடம் மேலும் குழப்பத்தைதான் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.மேலும், போதிய இணையதள இணைப்பு வசதி இல்லாததால் பொதுமக்கள் அந்த வரைபடத்தைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால், போா் தொடங்கி 57 நாள்களுக்குப் பிறகும் காஸா மக்களின் துயரம் தொடா்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...படவரி... காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் தரைமட்டமான வீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.