ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று (டிச.10) காலை 9.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
வறுமை மிகுந்து காணப்படும் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21-ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டுத் துப்பாக்கி வெடித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

பெரும்பாலை வனப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலம்: கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


