
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் நேரிட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 300-க்கும் மேற்பட்டோர் இரவிலேயே மீட்கப்பட்டனர். இவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் இருப்பதற்காகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர்.
வெள்ளப் பெருக்கு காரணமாக கெய்ர்ன்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் 1.60 லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நேரிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
கெய்ர்ன்ஸ் நகரில் மழை குறைந்தபோதிலும் அருகிலுள்ள போர்ட் டக்ளஸ், டெயின்ட்ரீ, குக்டவுன், வுஜல்வுஜல் மற்றும் ஹோப் வேலி ஆகிய பகுதிகளுக்கு மழை – வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரவு மிகவும் மோசமானதாக, சவாலுக்குரியதாக இருந்தது. சுமார் 300-க்கும் மேற்பட்டோரை மீட்டோம் என்று குயின்ஸ்லாந்து காவல் ஆணையர் காதரினா கரோல் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பகுதிகளை இரு புயல்கள் கடந்துசென்றபோதிலும் பலத்த காற்று காரணமாக லேசான பாதிப்புகளே நேரிட்டது. எனினும், பலத்த மழை – வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
சாலைகள், ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டன. பல குடியிருப்புப் பகுதிகள் தொடர்பு இழந்தன. 14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.