இஸ்ரேலின் புதிய ஆயுதம்!

காஸா மக்களின் பட்டினியை இஸ்ரேல் போர் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்வதாக அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 
காஸாவின் தெற்குப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ள மக்கள்.
காஸாவின் தெற்குப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ள மக்கள்.

காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சி செய்வதாக அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch)  குற்றம் சாட்டியுள்ளது. 

காஸாவிற்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்காத இஸ்ரேல், காஸா மக்களைப் பட்டினியால் கொல்ல முயற்சிக்கிறது, இது ஒரு போர் குற்றமாகும் எனத் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. 

தண்ணீர், உணவு, எரிபொருள், மருந்துபொருள்கள் என எந்த மனிதநேய உதவிகளும் காஸாவிற்குள் போதுமான அளவு அனுமதிக்கப்படவில்லை. விளைநிலங்கள் போன்ற மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் அழித்துவருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் மற்றும் உதவிகளை வழங்க வேண்டியது காஸாவை ஆக்கிரமித்திற்கும் இஸ்ரேலின் பொறுப்பு என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

மக்களின் பட்டினியை மனதில் கொண்டு இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது. அதற்கு பதிலளித்த இஸ்ரேல் 'மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, யூத எதிர்ப்பு அமைப்பு' எனக் கூறி போர் நிறுத்தத்திற்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com